பெரம்பலூர் :வேப்பந்தட்டை வட்டம் திருவாலந்துறை கிராமத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக செயல்பாடுகளில் ஈடுபட்ட ஆசிரியரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்ட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு இன்று பள்ளி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாலந்துறை கிராமத்தில் உள்ள ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் லால்குடியை சேர்ந்த ஆசிரியர் சவுந்தராஜன் கடந்த இரண்டாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாத தொல்லை செய்ததாக கடந்த 20-நாட்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பெற்றோர் மற்றும் தலையாசிரியர் கொடுத்த புகாரின் தலைமறைவாக இருந்த ஆசிரியரை நேற்று இரவு வி.களத்தூர் போலிசார் கைது விசாரணையில் 16-சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்ததையொட்டி, சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் பொற்றோர்களுக்கு தெரியபடுத்தவில்லை எனக்கூறியும்,
அவருக்கு பள்ளி நிர்வாகிகள் உடைந்தையாக இருந்ததாகக் கூறியும், கைது செய்யப்பட்ட ஆசிரியரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டல் விடுத்தனர்.
செய்தியாளர்களிடம் தகராறு செய்தால் பள்ளி சூறையாடப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததால் பள்ளி நிர்வாகிகள் பின்வாங்கினர்.
மேலும், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.