14-9-gdp-1

பெரம்பலூர் : தமிழக பால்வளத்துறையின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கென்று திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பால் உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களில் தினமும் பால் ஊற்றி வரும் பணத்தில் மாதம் 1 ரூபாய் பிடித்தம் செய்து வந்தால் இடர்பாடு அடையும் காலங்களில் இழப்பீட்டு நிதியுதவி வழங்கப்படும்.

அதன்படி, விபத்தின் காரணமாக குணப்படுத்த இயலாத இரண்டு கண்கள் அல்லது இரண்டு உபயோகப்படுத்த இயலாத இரண்டு கைகள், கால்கள் என இழப்பு ஏற்பட்டோ அல்லது விபத்தில் இறந்தாலோ பால் ஊற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடர்பாடான நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு இழப்பீட்டு நிதியுதவியாக ரூ.1.75 லட்சமும், விபத்தின் காரணமாக ஒரு கை அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு ஏற்பட்டால் ரூ.75,000 இழப்பீட்டு நிதி உதவியாக வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல, விபத்தின்போது இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ அந்த பால் ஊற்றும் உறுப்பினரின் 21 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம் கல்வி உதவியுத் தொகையும், 21 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்குழந்தைக்கு திருமண நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பெண் குழந்தையின் வயது 18 க்கு கீழ் இருந்தால் அவர; 21 வயது நிரம்பும் வரை திருமண உதவித்தொகாய ரூ.10,000 வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டம் தொண்டபாடி சங்கத்தைச் சேர்ந்த நல்லுச்சாமி, பாரதிநகர் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் வெங்கடாசலம், ஆகியோர் பணியின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இறக்க நேரிட்டதால் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா 1.75 லட்சமும், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையா தலா ரூ.20,000 வீதம் என ஆகமொத்தம் 1.95லட்சம் வீதம் 4 நபர்களுக்கு ரூ.5.85 லட்சமும், எசனை கீழக்கரை சங்கத்தைச் சேர்ந்த நடேசன் என்பவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.1.75 லட்சமும் தமிழக முதலமைச்சர் அவர்களால் 15.7.2015 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கப்பட்டது. மேலும், பெருமத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளராக பணிபுரிந்த ராயம்மாள் என்பவர் விபத்தில் உயிரழந்ததால் அவரது மகளுக்கு இழப்பீட்டு நிதியாக ரூ.1.75 லட்சம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.9.35 இலட்சம் மதிப்பிலான இழப்பீட்டு நிதியுதவி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 179 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் மொத்தம் 16,000 உறுப்பினர்கள் பால் உற்பத்தியாளர்களாக உள்ளனர். இதுவரை திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திட்டத்தில் சேராமல் இருக்கும் பால்உற்பத்தியாளர்களை உடனடியாக இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பால்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு பால்வளத்துறை துணைப்பதிவாளர் பாலசுந்தரத்தை 9962249175 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!