பிரதமர் மோடியின் சவாலை ஏற்று இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா பத்ரா தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, தன்னை போல் உடற்பயிற்சி செய்ய முடியுமா என, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்பதாக கூறிய மோடி, விரைவில் அதற்கு பதில் அளிப்பதாகவும் கூறியிருந்தார்.இதனையடுத்து, பூங்கா ஒன்றில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைதொடர்ந்து, உடற்பயிற்சி செய்வதில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா பத்ரா மற்றும் 40 வயதை கடந்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆகியோருக்கு, மோடி சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் சவாலை ஏற்று இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை, மோனிகா பத்ரா தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tweets by manikabatra_TT