பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை 5.30 மணிக்கு துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னை சித்தர்.இராஜகுமார் குருஜி தலைமையில் நடைபெற்றது.
உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நடத்தப்பட்ட கோ பூஜை, (செப்.13 முதல் நவ.2 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடக்கிறது. தொடர்ந்து நாள் 15வது நாள் இன்று கோபூஜை நடத்தப்பட்டது. பின்னர், 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது. சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் சேர்ந்த மெய்யன்பர்கள் வழக்கறிஞர் ரத்தினவேல் மற்றும் நடராஜ பாபா, குஜராத் ஹரிஷாபட்டேல், (திருச்சி) துறையூர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ராமநாதன், செயலாளர் செல்வராஜ், திருவண்ணாமலை பாண்டியன் ஸ்வாமிகள், ஆசனூர் வெங்கடேஸ்வர ஸ்வாமிகள், சென்னை ரவி சுவாமிகள்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடி கோமாதா அருந்ததிக் குழுவினர், ஏ.டி.எஸ்.பி விஜயபாஸ்கர், பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ராஜசிதம்பரம், மற்றும் டாக்டர்.சிவக்குமார், நந்தி.காம் – அமெரிக்கா நந்திபாபா, பெரம்பலூர் கனரா வங்கி மேலாளர்என். இராஜு உள்பட ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாகாசித்தர்கள் அறக்கட்டளை இயக்குநர்கள் தவயோகி சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் ரோகிணி மாதாஜி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கோமாதா, பூஜையில் கலந்து கொள்ளவும், அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வஸ்திர தானம், ரொக்கமாக நன்கொடை வழங்கவும் விரும்புவர்கள் +91 8870994533 என்ற எண்ணிலும் www.mahasiddhargaltrust.org யிலும் தொடர்பு கொள்ளலாம்.