பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னைசித்தர். ராஜ்குமார் குருஜி தலைமையில் நடைபெற்று வருகிறது.
உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நடத்ப்பட்ட கோ பூஜை, (செப்.13 முதல் நவ.2 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடக்கிறது.
இன்று 35 வது நாளாக 108 லட்சுமி போற்றி கோமாதா பூஜை, 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது. சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அன்னதான நிகழச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து உள்ளது.
கோமாதா, பூஜையில் கலந்து கொள்ளவும், நன்கொடை அல்லது தர்மம் அளிக்க விரும்புவர்கள் +91 8870994533 என்ற எண்ணிலும் www.mahasiddhargaltrust.org
யிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.