perambalur_collectorateஇது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், (சிறுபான்மையினர்) சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-2016 ஆம் நிதியாண்டுக்கு ரூ.300 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில்லரை வியாபாரம் மற்றும் சிறு தொழில்கள் ஆட்டோ, கார், வாங்குவதற்கு விவசாயிகளுக்கு இயந்திர கலப்பை, கறவை மாடுகள், கைவினைஞர், மரபுவழிச் சார்ந்த தொழில்கள், இளம் தொழில் பட்டதாரிகள், திட்ட அறிக்கை சார்ந்த சுய தொழில் கடன் மற்றும் தொழில் கல்வி பயில்வதற்கு கல்வி கடன் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விருப்பமுள்ளவர்கள் சிறுபான்மையினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு கிராமங்களில் ரூ.98 ஆயிரமும், நகர்புறங்களில் ரூ.1 லட்சத்து 20,ஆயிரத்திற்கு மிகாமலும், 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தகுதியான நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று சாதி சான்று, வருமான சான்று, பிறப்பிடச் சான்று , குடும்ப அட்டை நகல், முன்னனி நிறுவனத்தின் விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால்), ஓட்டுநர் உரிமம் (வாகனங்களுக்கு கடன் பெறுவதற்கு) வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவண நகல்களுடன், பெரம்பலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது – தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!