பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 – திங்கள்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 8 – செவ்வாய்க்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 9 – புதன்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 10 – வியாழக்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 – சனிக்கிழமை – வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 14 – திங்கள்கிழமை – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 – புதன்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

டிசம்பர் 18 – வெள்ளிக்கிழமை – வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை

டிசம்பர் 21 – திங்கள்கிழமை – உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்

டிசம்பர் 22 – செவ்வாய்க்கிழமை – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

டிசம்பர் 9 – புதன்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 10 – வியாழக்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 – சனிக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 14 – திங்கள்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 – புதன்கிழமை – அறிவியல்

டிசம்பர் 18 – வெள்ளிக்கிழமை – சமூக அறிவியல்

டிசம்பர் 21 – திங்கள்கிழமை – கணிதம்

தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!