பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது
பிளாஸ்டிக் இல்லா பெரம்பலூர் மாவட்டமாக உருவாக்க சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு துணிப்பைகளையும், முதல்பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1000ம், இரண்டாம் பரிசு பெற்றவர;களுக்கு தலா ரூ.750ம், மூன்றாம் பரிசு பெற்றவர;களுக்கு ரூ.500ம் பரிசாக மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது14.8.2015 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வழங்கினார்.
மேலும், மேடைநாடகங்கள், மனிதசங்கிலி பேரணிகள், துப்புரவு முகாம்கள், வணிகர;களுக்கென்று சிறப்பு கூட்டம், வீடு வீடாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம், வீதி வீதியாக ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர;வு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்டம், பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் உலகம் வெப்பமயமாகிக்கொண்டிருக்கும் வேலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்கும் வகையிலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை மாணவ,மாணவிகளிடையே எடுத்துக்கூறும் வகையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நேற்று (15.8.2015) சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை எதிர்கால இந்தியாவை வழிநடத்தவுள்ள மாணவ,மாணவிகளிடையே விதைப்பதன் மூலம் இனிவருங்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைக்க முடியும் என்ற நோக்கத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காகவும், பார்வையாளர்களாகவும் வந்திருந்த மாணவ,மாணவிகள், ஆசிரியப்பெருமக்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க அவரைத்தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், இனி கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ பொருட்கள் வாங்கச்செல்லும்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், துணிப்பைகளையே பயன்படுத்துவோம் என்று அனைத்து மாணவ,மாணவிகளும் ஒருமித்த குரலில் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.