பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு துணிப்பைகளையும்,
முதல்பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1000ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.750ம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.500ம் பரிசாக மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வழங்கினார்.
மேலும், மேடைநாடகங்கள், மனிதசங்கிலி பேரணிகள், துப்புரவு முகாம்கள், வணிகர;களுக்கென்று சிறப்பு கூட்டம், வீடு வீடாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம், வீதி வீதியாக ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்டம், பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இதில் , முதன்மை கல்வி அலுவலர் முனசாமி, குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் பாப்பம்மாள், துணைத் தலைவர் செந்தில், செயல் அலுவலர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.