பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா பகுதிகளாக உருவாக்கிட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர், குரும்பலூர், லப்பைக்குடிக்காடு மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தெர்மாகூல்ஃஸ்டைரோபோரிம் பிளேட் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள், அலுமினியம் பூசப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாவணவர்கள், சுய உதவிக்குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றறும் தன்னார்வ அமைப்புகளைக் கொண்டு பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, உறுதி மொழி எடுத்தல், துணிப் பைகள் விநியோகித்தல்,
மாணவ மாணவர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர், மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் வீடு, வணிக நிறுவனங்களில் பிரசுரங்கள் வழங்குதல் ஆகிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்வர்கள் மீது 1986ம் ஆண்டு சுற்றுச்சுழல் (பாதுகாப்பு) சட்ட பிரிவு 5ன் படி ரூ.1.00 இலட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் ரூ.1,000ம், சாலையோர வியாபாரிகளுக்கு அபராதம் ரூ.200ம், அந்த பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பவர்களுக்கு அபராதம் ரூ.100ம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
அதுமட்டுமல்லாது பொறுப்பற்ற முறையில் நீர்நிலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களின் மீது குப்பைகளை முதல்முறையாக கொட்டுபவர்களுக்கு அபராதமாக ரூ.1,000ம்,
இரண்டாவது முறையாக அதே செயலை செய்தால் அபராதமாக ரூ.10,000ம் விதிக்கலாம். கழிவுகளை தரம் பிரித்து ஒப்படைக்காத மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள் மீது அபராதமாக ரூ.200ம் விதிக்கலாம் என்பன போன்ற சட்ட திட்டங்களையும் பொதுமக்கள் அறியும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் இல்லா பெரம்பலூரை உருவாக்க நாம் அனைவரும் சபதம் ஏற்று செயலாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசினார்.
இகூட்டத்தில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மார்க்ரெட் சுசிலா, உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர், செயல் அலுவலர்கள் குமரன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.