பெரம்பலூர் மாவட்டம் கோரையாறு வரை இயக்கப்பட்டு வந்த கோரையாறு நகர பேருந்து பூமிதானம் வரை சென்று வரும் புதிய வழிதடத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளரும், நிலவங்கித் தலைவருமான கண்ணுசாமி, மலையாளப்பட்டி ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரம், அதிமுக கட்சி நிர்வாகிகள் விஜயபுரம் சின்னத்தம்பி உள்பட பலர் உடனிருந்தனர்.