2014-15ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக புத்தாக்க அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப கழகத்தால் நடத்தப்படும்
சென்ற கல்வி ஆண்டில் 87 பள்ளிகளிலிருந்து 90 மாணவ, மாணவிகள் வித விதமான 90 அறிவியல் மாதிரிகளை செய்து காண்பித்தனர். இது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும், பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த ஆண்டும் 127 பள்ளிகளிலிருந்து 136 தொழிற்நுட்ப அறிவியல் மாதிரிகளை மாணவ,மாணவிகள் தயாரித்து இயக்கி காண்பிக்க உள்ளனர்.
இந்தாண்டும் பங்கு பெறும் மாணவ, மாணவிகளுக்கு சென்னை அறிவியல் தொழிற்நுட்ப கழகத்தின் மூலம் ரூ.5000ஃ- நிதி உதவி பெறப்பட்டு அறிவியல் தொழிற்நுட்ப மாதிரி தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.