poolambadi_park_col_inspection

பெரம்பலூர் : பூலாம்பாடி பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளையும், நபார்டு திட்டத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் அரியாறு ஓடையின் குறுக்கே புதியதாக அமைக்கப்படடு வரும் பாலம் கட்டுமான பணிகளையும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது அண்மையில் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டம் 2013-2014 ன் படி கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தனி ஒரு நபருக்கு 58 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இத்திட்டத்தில் ரூ.2 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டிற்கு அரசிடமிருந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டு 4 புதிய கிணறுகளும், 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும், 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும், 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், 3300 மீட்டர் (DI) குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் பேரூராட்சி பகுதி முழுவதும் நாளொன்றுக்கு தனியொரு நபருக்கு 80 லிட்டர் (நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை விட கூடுதலாக 10 லிட்டர்) பாதுகாக்கப்பட்ட குடிநீர் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது.

மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டம் 2013-14 மற்றும் 2014-15 ன் படி 2013-14 ஆம் ஆண்டு 19 சிறு மின் விசைப் பம்புகளும், 2014-15 ஆம் ஆண்டு 4 சிறு மின் விசைப் பம்புகள் அமைக்கப்பட்டன. மேலும், அரசடிக்காடு கிணற்றிலிருந்து பாரதி நகர் வரை குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் மாற்றி அமைத்தல் போன்ற பணிகள், ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதனால் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் குடிநீரின் தேவை தன்னிறைவு பெற்றுள்ளது.

பூங்கா மற்றும் விளையாடுமிடம் அபிவிருத்தி திட்டம் 2013-14 ன் படி நடுநிலைப்பள்ளி அருகில் பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவினை குழந்தைகள் பயன்பாட்டிற்காகவும், முன்புறப் பகுதியில் உள்ள காலி இடத்தில் கம்பி வேலி அமைத்து பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் பூச்செடிகள் மற்றும் நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கவும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

நபார்டு திட்டம் 2013-14 ன் படி பூலாம்பாடி பேரூராட்சிக்குட்ப்பட்ட அரசடிக்காடு மற்றும் மேலக்குணங்குடி பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மலையோரப் பகுதியில் உள்ள விளைநிலங்களிலிருந்து இடு பொருட்களை கொண்டு செல்வதற்கும், விளை பொருட்களை சந்தைப் படுத்தவும், மிகுந்த சிரமம் இருந்ததை தொடர்ந்து, வேப்படி பாலக்காடு பகுதியிலிருந்து ஊற்றெடுத்து வரும் அரியாறு வாரி பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் ஏரிகளுக்கு வரத்து வாய்க்காலாக இருந்து வருகிறது.

மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அரியாறு ஓடையில் தொடர்ந்து மூன்று மாத காலம் சுமார் 5 கி.மீ. சுற்றிக் கொண்டு வரும் நிலை இருந்து வந்தது. இந்த இடர்பாட்டை அகற்றும் பேரில் நபார;டு திட்டத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் அரியாறு ஓடையின் குறுக்கே புதிய பாலம் அமைககப்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விடுபட்டுள்ள தார் சாலையை பாலத்துடன் இணைத்து அனுகு சாலை விரைவில் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் வளர்ச்சி திட்டம் 2014-15 ன் படி ரூ.4.50 இலட்சம் அரசு மான்யம் மற்றும் ரூ.2.00 பேரூராட்சி பங்குத் தொகை ஆக கூடுதல் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் பூலாம்பாடி பேரூராட்சியில் பூலாம்பாடி 1பி, மேலக்குணங்குடி, பாரதிநகர் ஆகிய மூன்று இடங்களில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இதில் பாரதிநகர் அங்கன்வாடி கட்டடம் பணி முடிவடைந்தும், மீதமுள்ள இரண்டு கட்டடப் பணிகள் முன்னேற்றத்திலும் இருந்து வருகிறது.

நபார;டு திட்டம் 2014-15 ன் வயிலாக ரூ.27.50 இலட்சம் மதிப்பீட்டில் கடம்பூர் -புதூர் தார் சாலை அமைத்தல் பணியில் முதல் அடுக்கு ஜல்லி பணிகளும், மற்றும் ரூ.27.50 இலட்சம் மதிப்பீட்டில் குரங்கு தோப்பு தார் சாலை அமைத்தல் பணியில் மண் வேலைகளும் நடைபெற்று வருகின்றது.

திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் திட்டம் 2014-15 ன் படி திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் கடம்பூர் மற்றும் பூலாம்பாடி 3வது வார்டு ஆகிய பகுதிகளில் புதிய சுகாதார வளாகங்கள் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறாக பூலாம்பாடி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மூலமாக மக்களின் அடிப்படை தேவைகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களை மக்கள் முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும் , என தெரிவித்தார்.

மேற்க்கண்ட நிகழ்ச்சிகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மார்க்கரெட் சுசிலா, செயல் அலுவலர் குமரன், உதவி பொறியார் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!