பெண்களுக்கு சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது
பெண்களுக்கான சமுதாய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பெண் கல்வி, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதியுதவிப் பற்றியும் காவல் நிலையத்தில் காக்கும் கரங்கள் 1091,1098 ஆகியவற்றை பற்றியும் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவிகளுக்கு தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் .ராசாராமன், பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, உதவி ஆய்வாளர் கே. செல்விமலர்க்கொடி, தாய்வீடு இயக்குநர் ரேவதி, டாக்டர் புவனேஸ்வரி, தமிழாசிரியர் வீராசாமி உடற்கல்வி இயக்குநர் எஸ்.பாலசுப்ரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி.நீலவேணி, பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.