.பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட பெண்ணகோனத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி,கிரைண்டர்களை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது;
தமிழக முதலமைச்சரின் தமிழகத்தை கல்வி வளர்ச்சியில் ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றிட கல்வித்துறையில் எண்ணற்ற புதிய சாதனைகளை படைத்து வருகிறார்கள் அதற்காக பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, பென்சில், காலணிகள், வரைபடங்கள், மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகின்றார்.
மேலும், பொருளாதாரம் காரணமாக எந்த ஒரு மாணவ, மாணவியும் உயர் கல்வி கற்பது தடைபடக்கூடாது என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்ணிணகளை வழங்கி வருகின்றார்.
மேலும், பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி படிப்பை முடித்த மகளிருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25,000த்துடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கமும், பட்டம் பெற்ற பெண்கள் என்றால் 4 கிராம் தங்கத்துடன் ரூ.50,000 திருமண உதவித்தொகை வழங்கி வருகின்றார்கள்.
கிராமப்புற பெண்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பதற்காக விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி வருவதுடன், நாளெல்லாம் வயல்வெளிகளில் கடினமாக உழைக்கும் தாய்மார்களுக்காக விலையில்லா மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்களையும் வழங்கி வருகின்றார்கள்.
நாட்டுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவரும் முதலமைச்சர் நாம் அனைவரும் நன்றிகூற கடைமைப்பட்டிருக்கின்றோம். பெண்ணக்கோனம்(தெற்கு) பகுதிக்கு 955 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறி வரப்பெற்றுள்ளது. முதற்கட்டமாக இன்று 150 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும், என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர் சகுந்தலாகோவிந்தன், துணைதலைவர் சேகர், ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சிமன்ற தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்