பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கமலக்கண்ணன் (வயது 25). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே ஊரை சேர்ந்த பிச்சையம்மாள்(வயது 50) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது தவறாக நடக்க முயற்சித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக பிச்சையம்மாள் கை.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் காமராஜ் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் தகராறு செய்த கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.