பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் பெண்ணை கிண்டல் செய்ததாகக் கூறி இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோததில் 4-பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை 5-பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் வேலூர் கிராமத்தை சேர்ந்த பிற இளைஞர்கள் கிண்டல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டதில் களரம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ், கவிதாஸ் உள்பட நான்கு பேர்களுக்கு காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.