பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் பாரில் விற்பனை செய்யப்பட்ட பெப்சி குளிர்பான பாட்டிலுக்குள் பிளாஸ்டிக் பேப்பர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் 9வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்,36, இவர் நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் எதிரிலில் உள்ள தனியார் மதுபான பாரில் 200 மில்லி அளவுள்ள பெப்சி குளிர்பானம் ரூ.20 கொடுத்து வாங்கியுள்ளார்.
அப்போது பாட்டிக்குள் பிளாஸ்டிக் பேப்பர் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.