பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே சேலம் வாலிபரை அடித்து கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எழில் நகரில் ஒரு ரத்தக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக இன்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலுார் போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து பெரம்பலுார் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேலம் மாவட்டம் உலிபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் ராஜ்குமார்(30), என்பதும், இவருக்கு ராதா என்பவருடன் கடந்த மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்ததையடுத்து பெரம்பலுார் மாவட்டம் விஜயகோபாலபுரம் கிராமத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து பெரம்பலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.