பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையில் 2 ஏரிகள் நிரம்பி உள்ளன.
பெரம்பலுார் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 73 ஏரிகள் உள்ளன. இதில் 600 எக்டேர் பரப்பளவு கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரி, 354 எக்டேர் பரப்பளவு கொண்ட வடக்கலுார் பெரிய ஏரி ஆகிய நான்கு ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.