பெரம்பலூர் : பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு , நகரச்செயலர் ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன்,பி. கிருஷ்ணசாமி, எஸ். கண்ணுசாமி, எஸ்.ஆர். ஜமால்முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் பேசியது:
தமிழக முதல்வரால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் தான் கிராம மக்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர். தமிழகத்தல் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்த முடியும் என, அந்தக் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், யாராலும் அதை அமல்படுத்த முடியாது. தமிழக முதல்வரால் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் தமிழகத்தை உற்று நோக்கி வருகின்றனர். அதற்கு காரணம், அதிமுக அரசின் செயல்பாடுகளே. தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டுமானால், அதிமுக தலைமையிலான அரசால் மட்டும் முடியும் என பேசினார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்செல்வன், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் அ. அருணாசலம், மாநில மீணவரணி இணைச்செயலர் பி. தேவராஜன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் அசோக்ராஜ், மாவட்ட பொருளாளர் பூவை.செழியன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகர அவைத்தலைவர் ரமேஷ் வரவேற்றார். இளைஞரணி செயலர் சிவக்குமார் நன்றி கூறினார்.