படவிளக்கம்: சென்னை ஆர்.கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக பெரம்பலூரில் எம்பி மருதராஜா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். அருகில் நகராட்சி தலைவர் ரமேஷ், யூனியன் சேர்மன் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கண்ணுசாமி மற்றும் பலர்.
பெரம்பலூர்: சென்னை ஆர்.கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றிப்பெற்றதால் பெரம்பலூரில் அதிமுகவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில்1,60, 432 ஓட்டுக்கள் பெற்று முதல்வர் ஜெயலலிதா வெற்றிப்பெற்றார்.
அதனை கொண்டாடும் விதமாக பெரம்பலூரில் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, சங்குபேட்டை ஆகிய பகுதிகளில் அதிமுகவினர் எம்பி மருதராஜா, நகர செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வெடிவெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கண்ணுசாமி, யூனியன் சேர்மன்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், அரசு வக்கீல் குலோத்துங்கன், மாவட்ட அணி செயலாளர்கள் கார்த்திகேயன்,செல்வகுமார், ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் வடிவேல், முன்னாள் கவுன்சிலர் சின்னராஜேந்திரன், புரட்சிதாசன், ஆலம்பாடி ஜெகதீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, சேகர், அக்ரி உதயக்குமார், கலைவாணன், காரியனுõர் சேகர், கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை தலைவர் முகமது இக்பால், நகர அணி நிர்வாகிகள் ராஜா, சிவக்குமார், பூபதி, சங்கு சரவணன், கவுன்சிலர் பேபிகாமராஜ், அரணாரை ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.