படவிளக்கம்: பெரம்பலூரில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்த அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகத்தை மாநில செயலாளரும், எம்பியுமான குமார் தொடங்கி வைக்கிறார். அருகில் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்செல்வன், நகர செயலாளர் ராமச்சந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் செல்வக்குமார் மற்றும் பலர் உள்ளனர்
பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் நிகழ்ச்ச்சி இன்று நடந்தது.
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், எம்பியுமான குமார் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, கண்ணுசாமி, யூனியன் சேர்மன்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், வக்கீல் குலோத்துங்கன், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், சிவப்பிரகாசம், கூட்டுறவு வங்கி இயக்குநர் புதூர் தங்கவேல், முன்னாள் கவுன்சிலர் சின்னராஜேந்திரன், நகர நிர்வாகிகள் சங்குசரவணன், முகமது இக்பால், பூபதி, சிவக்குமார், ராமகிருஷ்ணன், செந்தில்குமார், ஜெயக்குமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.