பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாளையொட்டி அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவசிலைக்கு அவரது நினைவுதினத்தையொட்டி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிகளில் ஒன்றியசெயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், நகராட்சி தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைதலைவர் சேகர், யூனியன் சேர்மன்கன் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் பாப்பம்மாள், துணைதலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, பூவைசெழியன், எம்.என். ராஜாராம், வக்கீல் குலோத்துங்கன், செல்வக்குமார், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், அரணாரை வைஸ்மோகன்ராஜ், சங்கு சரவணன், நகர நிர்வாகிகள் ராஜபூபதி, முகமது இக்பால், சிவக்குமார்,மோகன்,மைதிலி, சின்னராஜேந்திரன், புரட்சிதாசன், ராஜா,வக்கீல் பழனிவேல், ஆலம்பாடி ஊராட்சிதலைவர் ஜெகதீஸ், எசனை பன்னீர்செல்வம், கோனேரிபாளையம் மனோகரன், இலக்கிய அணி மாவட்ட துணைச் செயலாளர் மேலப்புலியூர் ரவிச்சந்திரன், பாடாலூர் ஊராட்சித் தலைவர் அ.வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.