பெரம்பலூர்: அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த பேருந்து நடத்துனர் திருவள்ளுவர்(38), பெரம்பலூர் புதிய பேருந்தினுள் காலை உணவை சாப்பிட்ட பிறகு கையை கழுவ பேருந்தின் கீழ் இறங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் நடத்துனரின் பணப்பையை எடுத்துக் கொண்டு மாயமானர்.
பணப்பையில் பயண கட்டண் வசூல் தொகை ரொக்கம் ரூ. 4500 , 3500 ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகளை மர்ம நபர் திருச்சென்று விட்டதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.