பெரம்பலூரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் உச்சகட்ட விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பஜாரில் கடும் வாகன நெருக்கடி நிலவி வருகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று மக்கள் புத்தாடை உடுத்துவது வழக்கம் ஆகும். இதனால் கடந்த ஒரு சில வாரங்களாக மக்கள் ஜவுளிக்கடைகளுக்கு சென்று புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரம்பலூரில் காலை முதல் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கியது.
பெரம்பலூர் பகுதியில் உள்ள சில கடைகளில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் வந்ததால், பகுதி பகுதியாக வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்ற வாடிக்கையாளர்கள் உடைகளை வாங்கி வெளியில் வந்த பிறகு கடையின் முன்பு காத்து நின்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை தீபாவளி என்பதால், இன்று ரெடிமேட் ஆடைகள் கடையிலும், பிளாட்பார கடைகளிலும் அதிகளவில் மக்கள் கூட்டம் காண்பபடுகிறது. தூத்துக்குடி நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், மருதானி, வளையல், ஜமிக்கி, பொட்டு போன்ற அழங்கார பொருட்களும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. மேலும், பலகார கடைகளிலும் முருக்கு, அதிரசம்,சோமாஷா, தட்டை, முந்திரி கொத்து போன்ற பொருட்களின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்தது. இதனால் மார்க்கெட் ரோடு, பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இடைவிடாது பெய்த அடைமழையிலும் குடையுடன் சென்னு கொள்முதலில் ஈடுப்பட்டதால் தீபாவளி விற்பனை களைகட்டியது.