மக்கள் சிந்தனை பேரவை சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கவுரவிக்கும் விழா பெரம்பலூரில் இன்று ஜே.கே மஹாலில் நடைபெறுகிறது. இதற்கு தலைமை ஏற்று பாராட்டு மடல்களை மாவட்ட தரேஸ் அஹமது மாலை 4 மணிக்கு வழங்குகிறார். வருவாய், கல்விதுறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.