பெரம்பலூர் நகர திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று மாலை 4:00 மணியளவில் பெரம்பலூர் சங்கு அருகில் இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி கட்சியின் செய்தி தொடர்பாளரும், திரைப்பட நடிகையுமான குஷ்பு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக சமூக சமத்துவப் படை நிறுவனர் ப.சிவகாமியை ஆதரித்து வாகனப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதுபோது திமுக நகர கழகத்திற்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள், வார்டு கழக பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள், கழக உடன் பிறப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பது பெரம்பலூர் நகர திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,