பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்தும், துறைமங்கலத்திலிருந்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளில் எல்இடியிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்க பெரம்பலூர் எம்.பி., மருதராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி இரண்டு சாலைகளில் எல்.இ.டி.,யிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.பி., மருதராஜா தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ரமேஷ், துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் உயர் மின் விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.பி., சந்திரகாசி, எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.