படவிளக்கம்: ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மையப் பகுதியில் பூச்செடிகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறார் நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ். உடன், சூப்பர் – 30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், பாடாலூர் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முட்புதர்கள் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிருந்து அலுவலகம் வரை மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, அலுவலக நுழைவு வாயிலிருந்து வளாகம் வரை சாலையில் உள்ள தடுப்பு சுவர் பகுதியில் முள் புதர்கள் மற்றும் குப்பைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டது.
தொடர்ந்து, தடுப்பு சுவறின் மையப்பகுதியில் பூச்செடிகள் நடும் பணியை நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சூப்பர்- 30 ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், பாடாலூர் ஊராட்சித் தலைவர் அ. வேல்முருகன், நகர்மன்ற உறுப்பினர் எம். ரமேஷ் பாண்டியன், மக்கள் சிந்தனைப் பேரவை உறுப்பினர்கள் எம்.எஸ். மணிவண்ணன், ஆ. துரைசாமி, மகேஸ்வரன், ரா. மாதேஸ்வரன், ஆர். சிவானந்தம், மணி, ஆசிரியர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.