பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் குறுவட்டஅளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைப்பெற்றது.
பெரம்பலூர் குறுவட்ட அளவிலுள்ள மாணவர்களுக்கான கோகோ, வாலிபால் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களிலுள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த நூற்றுணக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். குழு விளையாட்டுகளான கோகோ, வாலிபால் போட்டிகளில் மாணவர்களுக்கு மட்டும் 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர், 19 வயதிற்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.