பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள டவுன்பஸ்நிலையம் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பொதுஇடமாக மாறியுள்ளது. உட்காரும் இடங்களில் இரும்பு இருக்கைகள் பெயா;த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள் அவதி அடைந்துவருகின்றன.
பெரம்பலூரில் டவுன் பஸ்நிலையம் உள்ளது. ஏறத்தாழ 50ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் திறந்துவைத்த இந்த பஸ்நிலையத்தில் இருந்து கடந்த பலஆண்டுகளாக நகர்ப்பேருந்துகள், மினிபேருந்துகள் இயங்கிவருகின்றன.
பெரம்பலூர் சுற்றுப்புற பகுதிகளுக்கு மினிபேருந்துகள் இங்கிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர், கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்தே அரசு நகர்ப்புற பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலான பயணிகள் டவுன் பஸ்நிலையத்திற்கு வந்து தங்களது தேவைக்கு பொருட்கள் வாங்கிகொண்டு அல்லது மருத்துவ சேவை உள்ளிட்ட தேவைகளுக்கு பெரம்பலூர் வந்து வேலைகளை முடித்துக்கொண்டு நகர்ப்புற பேருந்துகளில் ஊர் திரும்பிவருகின்றன.
பஸ்நிலையத்தின் உள்பகுதி, வெளிப்பகுதியில் சாலைகள் உயா;த்தப்பட்டுவிட்டதால், சிதிலம் டவுன் பஸ்நிலைய கட்டிடம் 2 அடி கீழே சென்றுள்ளது. இதனால் மழைநீர் பயணிகள் உட்காரும் இடங்களுக்கு வந்து குட்டைகள் போல தேங்கி, நோய்பரப்பும் கொசுக்கள் உற்பத்திக்கூடமாக மாறிவருகிறது.
பஸ்நிலைய கட்டிட சுவர்களில் ஆங்காங்கே பயணிகள் எச்சில் துப்பும் இடமாகவும், மதுபான பிரியர்கள் தாங்கள் இரவு நேரத்தில் மதுஅருந்திவிட்டு பாட்டில்கள், குத்கா, பயன்படுத்திய பிளாஸ்டிக் தம்பளர்கள் ஆகியவற்றை போட்டுவிட்டு சென்றுவிடுவதால் எப்பொழுதும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரமற்ற நிலையில் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகள் உட்காரும் இரும்பு இருக்கைகளை சமூக விரோதிகள் பலஇடங்களில் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் இல்லாமலேயே பயணிகள் இரும்புகளையே உட்காரும் இருக்கையாக பயன்படுத்திவருகின்றனர்.
டவுன்பஸ்நிலையத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதராமல், வருமானத்தை பெருக்குவதில் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவருகிறது. போர்க்கால அடிப்படையில் பயணிகள் வசதிக்காக சேதமடைந்த இருக்கைகளை உடனே மாற்றிதந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதராவிட்டால் , நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர்..