பெரம்பலூர்: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த பேருந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்தது. அப்போது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்தூர் கிராமத்தை நோக்கி மினி பஸ்சை எறையூரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் ஜெயராமன் செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளார். முன்னே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து கவனிக்காமல் விட்டதால் மினி பஸ் அரசு பேருந்து மீது மோதியது. இதில் மின பஸ்ஸில் பயணித்த 15 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தப்பி ஓடிய ஓட்டுநர் ஜெயராமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.