பெரம்பலூர் : நமக்கு நாம் விடியல் மீட்புப் பயணத்தின் 2 ஆம் கட்ட பயணம் பெரம்பலூரில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்து கொண்டு உரையாடிய போது பேசியதாவது:
மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு செல்போன் வழங்கும் ஜெயலலிதா அவருடைய செல்போன் எண்ணையும் வழங்கினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். ஜெயலலிதா கொடாறாடு சென்றால் கூட பொதுமக்கள் அவருடன் தொடர்பு கொண்டு குறைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அப்படி முதல்வர் ஜெயலலிதா வழங்கினால் அவருக்கு பெரம்பலூரில் பாராட்டுவிழா நடத்தப்படும் என தெரிவித்தார்.