பெரம்பலூர்: பெரம்பலூரில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள், இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சாலை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தை சேர்ந்த மெக்கானிக்குகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கருப்பு பேட்ஜ் அனிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் துறையூர் சாலை பகுதியிலுள்ள மேற்கு வானொலி திடலில் நேற்று நடைபெற்ற
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட தலைவர் உசேன்பாபு தலைமை வகித்தார்.
சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 100க்கும்மேற்ப்பட்ட மெக்கானிக்குகள் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சாலை
பாதுகாப்பு சட்டத்தினால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பேசினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் துணை தலைவர் சங்கர் வரவேற்றார்.
துணைச்செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.