பெரம்பலூர் நகரில் இன்று துறைமங்கலம், அபிராமபுரம், தீரன்நகர், வெங்கடேசபுரம், புதிய மதனகோபாலாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் இருந்து மின்சார வினியோகத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரியத்தினர் எங்கு பழுது ஏற்பட்டது என்பதை கண்டறிய முயற்சித்து பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு இரவு சுமார் 9.50 மணி வரை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கியது. சுமார் இரவு 9.50க்கு பிறகு சரி செய்து மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் மின்வாரியத்தினர் வழங்கினர்.