பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சமூக சமத்துவபடை கட்சி தலைவர் சிவகாமி இன்று வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக வேப்பந்தட்டையில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் சிவகாமி, பாலையூர், தொண்டாப்பாடி, நெய்குப்பை, அனுக்கூர், குடிக்காடு, சாலை, பிரம்மதேசம், வல்லாபுரம், வாலிகண்டபுரம் உட்பட ஏராளமான கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், வாகனத்தில் சென்றும், திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.