பெரம்பலூரில் தொழிலதிபர் ஒருவரின் 19 லட்ச ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை கடத்திய இளைஞரை சினிமா பாணியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வெங்கடாஜலபதி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(54). தொழிலதிபரான இவர் நேற்று தனது 19 லட்ச ரூபாய்
மதிப்புள்ள (டிஎன்.46.எஸ். 1112) என்ற பதிவு எண் கொண்ட இன்னோவா காரை பெரம்பலூர் அரசு மருத்துவமனை பின்புறம் ஆலம்பாடி சாலையில் சாவியுடன் நிறுத்தி
விட்டு நண்பர் ஒருவரிடம்பேசி கொண்டிருந்த போது காரை வாலிபர் ஒருவர் திடீரென எடுத்து சென்றுள்ளார்.
இதனை பார்த்து பொது மக்கள் காரை யாரோ எடுத்து செல்கிறார்கள் என கூச்சலிட்டதால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் தனது காரை அடையாளம் தெரியாத ஒருவர் கடத்தி செல்வது குறித்து என பெரம்பலூர் போலீசார் மற்றும் திருமாந்துறை, சமயபுரம் சுங்கச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து திருமாந்துறை சுங்கச்வாவடி அருகே கார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமிலதா தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக காரை துரத்தி சென்று திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் மடக்கி பிடித்து, காரை மீட்டதோடு, கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரையும் கைது செய்தனர்.
னையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்கொண்ட விசாரணையில் அவர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் செல்வக்குமார்(28),என்பது தெரிய வந்துள்ளது
செல்வக்குமாரை பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.