பெரம்பலூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 2ஆயிரத்து691 வழக்குகளுக்கு ரூ.2கோடியே 80 லட்சம் மதிப்பீல் தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் உச்சநீதிமன்ற உத்திரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்தது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் பலகாலம் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு ஒரேநாளில் தீர்வு காணப்பட்டது. நீதிபதிகள் குழுவினர் காலை முதல் மாலை வரை மனுக்களை விசாரித்து தீர்வு கண்டனர்.
இதில் விபத்து நட்ட ஈடாக 37 பேருக்கு ரூ.93லட்சத்து 56ஆயிரமும், செக்மோசடி வழக்குகளில் ரூ.15லட்சத்து 84ஆயிரத்து 365-ம், 5 சிவில் வழக்குகளில் ரூ.25 லட்சத்து 63ஆயிரத்து 500-க்கும், வங்கி கடன்கள் நிலுவை தொடர்பாக 191 வழக்குகளில் ஒருகோடியே 37 லட்சத்து 22ஆயிரத்து 871 மதிப்பில் தீர்வும் காணப்பட்டது. நிலுவையில் இருந்த 302 குற்றவியல் வழக்குகளில் ரூ.1லட்சத்து 60ஆயிரம் உடனடி அபராதமும் வசூலிக்கட்டது.
பிறப்பு இறப்பு சான்றிதழ் கேட்டு தொடா;ந்துள்ள வழக்குகளில் 2ஆயிரத்து 151 பேருக்கு பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிடவும், நிலஆh;ஜித வழக்குகளில் ரூ.6லட்சத்து 66ஆயிரத்து 456-ம் வசூலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
விவாகரத்து கேட்டு ஒரு தம்பதியினர் தொடர்ந்திருந்த 1 வழக்கில் சமரசம் ஏற்படுத்திவைக்கப்பட்டது.
ஒரே நாளில் மொத்தம் 2ஆயிரத்து 691 வழக்குகளுக்கு ரூ.2கோடியே 80 லட்சத்து 53ஆயரத்து 192 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றவியல் நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகிந்திரவர்மா, நிலஅபகரிப்பு நீதிமன்ற நீதிபதி பிரவீன்குமார், குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுஜாதா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுநிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.