பெரம்பலூர்: நாளை காலை 9 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக தலைவர் மு.கருணாநிதி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
பெரம்பலூரில் திமுக. சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சியான சமூக சமத்துவப் படையின் நிறுவனர் ப.சிவகாமி, பெரம்பலூர் வேட்பாளராகவும், குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க.துரைராஜ், மற்றும் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிவசங்கர், ஜெயங்கொண்டனம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரனை ஆகியோரை ஆதரித்து கடைவீதி வழியாக சென்று காமராஜர் வளைவு அருகே வேனில் இருந்துபடியே பிரச்சாரம் செய்கிறார்.