பெரம்பலூர் ; பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நகர தி.மு.க சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் ஜி. துரைராஜ், துணைச் செயலர்கள் நூ. சபியுல்லா, கோ. கமலம், பொருளாளர் பெ. முத்துகுமார், மாவட்டப் பிரதிநிதிகள் என். ஜெயக்குமார், ரா. ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, ச.அ. பெருநற்கிள்ளி, வி.எஸ். பெரியசாமி, அவைத்தலைவர் அ. நடராஜன், ஒன்றியச் செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். அண்ணாதுரை, தி. மதியழகன், எஸ். நல்லத்தம்பி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட அணி நிர்வாகிகள் மகாதேவி ஜெயபால், ப. செந்தில்நாதன், தலைமைக் கழகப் பேச்சாளர் மு. விஜயரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
துணைச் செயலர் கோ. ரெங்கராஜன் வரவேற்றார். வார்டு செயலர் பி. அகஸ்டின் நன்றி கூறினார்.