படவிளக்கம் :பெரம்பலூரில் நடந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில்மாநில இளைஞரணி தலைவர் கவின்கமல்குமார் பேசுகிறார். அருகில் மாவட்டதலைவர் சந்திரசேகரன், மாநில இளைஞரணி பொறுப்பாளர் அடைக்கலராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாராம் மற்றும் பலர்.
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனைகூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். மாவட்டஇளைஞரணிபொதுசெயலாளர் வேலுசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டதலைவர் சந்திரசேகரன், தேசியபொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், இளைஞரணி கோட்டப்பொறுப்பாளர் சபரிஸன், மாநில இளைஞரணி பொறுப்பாளர் அடைக்கலராஜ், மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கரன், மண்டல தலைவர் குருராஜேஷ் உட்பட பலர் பேசினர். சிறப்புவிருந்தினராக மாநில இளைஞரணி தலைவர் கவின்கமல்குமார் கலந்து கொண்டுபேசினார். இதில் சட்டசபை தேர்தலில் மாநில பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெறுவதற்காக இளைஞரணியின் செயல்பாடு, கட்சியை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி,குளம், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்பு அக்கற்றி தூர் வார வேண்டும், அனைத்து கிராமங்களிலும் உள்ள சீமகருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும், பெரம்பலூரிலிருந்து ஆத்தூருக்கு நள்ளிரவில் பஸ் வசதி செய்யத்தரவேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவிகள் வந்து செல்லும் வசதியாக அந்தந்த நேரங்களில் அரசு பஸ் இயக்கவேண்டும்.
மலையாளப்பட்டியில் புதிய நீர்தேக்க அணையும், அரசு மேல்நிலைப் பள்ளியும் கட்ட வேண்டும், விவசாயிகளுக்கு மழையினால் சேதமடைந்த பயிர் வகைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும், அரும்பாவூரில் விவசாயவிளை பொருட்களை பதப்படுத்தி வைக்கும் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், கோரையாறு நீர் வீழ்ச்சியயை சுற்றுலாமையமாக மேம்படுத்தவேண்டும், தொண்டைமாந்துறை அய்யர்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதாரமையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராமசாமி, மாவட்ட பொறுப்பாளர் வரதராஜ், இளைஞரணி நிர்வாகிகள் ஆறுமுகம், அசோக், பாலமுருகன்,கோவிந்தசாமி, பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேப்பந்தட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர் செல்லமுத்து நன்றி கூறினார்