பெரம்பலூர் : பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் பேசியதை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.,வினர் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சந்திசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய தலைவர்கள் சீனிவாசன், தனபால், ராஜேந்திரன், அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலைச்செல்வன் உட்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.