பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, ஆட்சியர் அலுவலகம் வரை மரக்கன்றுகள் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்கள் ஆகியப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இவ்விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சூப்பர்- 30
ஒருங்கிணைப்பாளர் நா. ஜெயராமன், பாடாலூர் ஊராட்சி தலைவர் அ. வேல்முருகன், மக்கள் சிந்தனைப் பேரவை உறுப்பினர்கள் எம்.எஸ். மணிவண்ணன், ஆ. துரைசாமி, மகேஸ்வரன், மாதேஸ்வரன், ஆர். சிவானந்தம், ஆர். குருராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.