தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலர் டி. பாஸ்கரன், நகரத் தலைவர் குரு. ராஜேஷ், ஒன்றிய தலைவர்கள் பாலவெங்கடேஷ், தனபால், சீனிவாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வணிக பிரிவு மாநிலத் தலைவர் திருமலை, தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் சிவசங்கர், உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.