பெரம்பலூர் : பெரம்பலூரில் சிறுவர்களுக்கான மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு முகாமில் 177 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில அளவில் சிறுவர்களுக்கான (சப்ஜூனியர்) கபடி சாம்பியன்ஷிப் 27-வது ஆண்டு போட்டிகள் இம்மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சிறுவர்கள் பங்கேற்பதற்காக வீரர்கள் தேர்வு முகாம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட தலைவர் ஓவியர் முகுந்தன் முன்னிலையில் நேற்று நடந்தது.
இந்த தேர்வு முகாமில் 16 வயதுக்கு உட்பட்ட எடை அளவு 50கிலோ அதற்கு கீழ் உள்ள சப்ஜூனியர் சிறுவர்கள் மொத்தம் 177 பேர் பங்கேற்றனா;. இதில் பயிற்றுனா;கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வடிவேல், ரவி, செந்தமிழ்ச்செல்வன், கோபி, அலெக்ஸ்.பிரபாகரன், சாந்தி ஆகியோர் 15 பேர் கொண்ட பெரம்பலூர் மாவட்ட கபடி அணியை தேர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கபடி கழக தலைவர் கவுரவத்தலைவர் அரவிந்தன், அமைப்புச்செயலாளா; ராஜூ, துணைத்தலைவா; ஜி.என்.ஒஜீர், மாவட்ட பொருளாளர் மாருதி ரமேஷ், இணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், சண்முகதேவன், ரமேஷ், திருச்சி மாவட்ட செயலாளர் கஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.