பெரம்பலூர் : பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் மற்றும் விளக்க பேரவை கூட்டம் துறைமங்கலம் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
சிபிஎம் பெரம்பலூர் ஆலத்தூர் வட்ட செயலாளர் இரா.வேல்முருகன் தலைமை வகித்தார்.
மாவட்டக்குழு சுபா தங்கராஜ், எ.கணேசன், ஏ.கே.ராஜேந்திரன், எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, பி.ரமேஷ், பி.கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலக்குழு உறுப்பினர், எஸ்.ஸ்ரீதர் தீர்மான விளக்கவுரை ஆற்றினார் மற்றும் வட்டக்குழு பி.கிருஷ்ணசாமி, ஆர்.முருகேசன் ஜெயலட்சுமி, கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான கிளை பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.