பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ:1. கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாற்றுத் தீர்வு சமசர தீர்வு மையத்தை உயர் மன்ற நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் தலைமையில் வகித்தார். ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத் தீர்வு மையக் கட்டடத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் சதீஷ் கே.அக்னிஹோத்ரி திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழக்கு தீர்வு நிதியுதவிகளை வழங்கினார்.
தலைமை வகித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் பேசியதாவது:
2012 ஆம் ஆண்ழல் கால்கோல்நாட்டப்பட்டு அதற்கு என்று தனியாக ஒரு கட்டடம் இன்று உருவாகியிருக்கிறது. மாற்றுமுறை தீர்வகம் என்பது நீதித்துறைக்கு எதிரானதல்ல. விரோதமானதல்ல. மக்களுக்கு நீதி விரைந்து வழங்கப்பட வேண்டும். குறைந்த செலவில் வழங்கப்பட வேண்டும். தரமான நீதி வழங்கப்பட வெண்டும் என்பதே நோக்கமாகும்.
அரசியலமைப்பு சட்டத்தை அமைத்து தந்த வித்தகர்களின் நோக்கமும் அதுவேயாகும். அந்த அடிப்படையிலேயே சமநீதி வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் அதிகாரம் 14, மனித உரிமை காப்பாற்றப்பட வெண்டும் அதிகாரம் 31 மற்றும் இது செயல் வடிவம் பெற வேண்டு மென்ற நோக்கத்தில் அதிகாரம் 39 ஆகியவற்றை நமது பிதாமகர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
ஆனால் அது இன்னும் முழுமையாக செயல்படவில்லை. செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மாற்றுமுறை தீர்வம் என்பது ஏழை பணக்காரர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வில்லாத நீதி வழங்கப்பட வேண்டும். அது விரைந்து வழங்கப்பட வேண்டும்.
இந்த அமைப்பு அமெரிக்க நாட்டிலே வளர்ந்து பெரிய வளர்ச்சி அடைந்து விட்டது. இப்போது அது தவழ்ந்து தவழ்ந்து பல நாடுகளை கடந்து தற்பொது இந்தியாவிற்குள் வந்திருக்கிறது.
நமது வரலாற்றை புரட்டி பார்த்தோமானால் அமெரிக்காவிற்கு முன்பே ஆலமரத்தடியில் பஞ்சாயத்து முறையில் நீதியை நமது முன்னோர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியத்திலும் சொல்லியிருக்கிறார்கள். இந்த மாற்றுமுறை தீர்வு முறையால் நீதித்துறை செயலிந்து விட்டது என்பதல்ல. இந்த தீர்வத்தின் மூலம் மக்களுக்கு தரமான நீதி உடனழயாக வழங்கப்பட வேண்டும். அதை நடைமுறையில் இருக்கும் நீதிமன்றங்கள் வரவேற்பதில் தயக்கம் இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த பல காரணங்கள். காவல் சுணக்கம், வழக்குகள் பெருக்கம், செலவினம் ஆகியவை. இவைடியல்லாம் கடந்து இந்த மாற்றுமுறை தீர்வம் நடைமுறை சிக்கல் இல்லாது எளிமையான முறையில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தீர்வு மையம் வரவேண்டும். அதுதான் இப்பழப்பட்ட தீர்வகங்கள்.
2005-ல் உச்சநீதிமன்றத்திலேயே சேலம் பார் அசோஷியஷன், தமிழ்நாடு என்ற வழக்கை உச்சநீதிமன்றம் இதுகுறித்து சொல்லும்பொது வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றுமுறை தீர்வம் குறித்து இரு வழக்கறிஞர் சகோதர மூத்தவர்கள் மிக மிக இனிமையாக பேசினார்கள்.
நாம், எப்பொதும் என்றும் விரும்பி விரும்பி பழக்கும் ஆர்ட்டிகள் 21 மனித வாழ்வாதார உரிமை, மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்று இப்படிப்பட்ட ஒரு இரத்த ஓட்டமாக மனித வாழ்வாதார உரிமையை ஆர்ட்டிக்கள் 21 உறுதி செய்கிறது. ஆர்ட்டிக்கிள் 22 வர்க்கறிஞர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும்பொதும், அல்லல்படும்போதும் வழக்கறிஞர்களின் உதவியை, ஆலோசனையை பெற ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் கைகோர்த்து கொண்டு உதவி செய்ய வெண்டும்.
அண்மையிலேயே ஒரு வழக்கில் யார் வழக்கறிஞர் என்று குறிப்பிட்டுள்ளேன். சமூக போராளி என்று ஒரு விளக்கத்தை அளித்துள்ளேன். அது புத்தகத்தில் வந்திருக்கிறது. இந்த மாற்றுமுறை தீர்வாயத்தில் வர்க்கறிஞர்கள் மிக மிக முக்கியம். அவர்களது உதவி இல்லைடியன்றால் இந்த திட்டம் முன்பு வளர்ச்சி அடையாது. வெற்றி பெறாது.
கிட்டத்தட்ட 3000 சிவில் வர்க்குகள் உரிமையியல் நீதிமன்றத்தில் இருக்கிறது. விரைந்து வழங்கப்படாத நீதி மறுக்கப்பட்ட நீதி. நமது உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டு மென்று அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரம் 21-லேயே இணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைந்து சமநீதி வழங்கப்பட வேண்டுமென்பதே மாற்றுமுறை தீர்வாயத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஆரம்பம், முடிவு அல்ல என அவர் பேசினர்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர்.எம்.டி. தீக்காராமன், முதன்மை மாவட்ட நீதிபதி டி.எஸ்.நந்தகுமார், தலைமை குற்றவியல் நீதிபதி. எம்.சஞ்சீவிபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா., உள்பட நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர் பார் அசோசியன் தலைவர் வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர் செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியசன் தலைவர் சஞ்சீவிராஜன், அட்வகேட் அசோசியன் செயலாளர் முகமது இலியாஸ், மற்றும் அரசு வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.