(படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி மாவட்டதலைவர்ராஜா பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினார்.)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கி ஓராண்டு முடிந்து இன்று இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக பெரம்பலூரில் மாவட்ட தமகா சார்பில் அதன் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சிகொடிஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து வெடிவெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரதலைவர் விஜயகுமார், நகரசெயலாளர் சத்யா, வட்டாரதலைவர்கள் சிவக்குமார், கிருஷ்ணஜனார்த்தனன், மோகன், இளவரசன், பாலு, சித்தார்த்தன், செந்தில், மேட்டூர்அசோகன், நமையூர் சுப்ரமணி, மாவட்ட நிர்வாகிகள் திருவண்ணாமலை,ரமேஷ், இளைஞரணி செந்தில், மகளிரணி எசனை ராகினி டீச்சர், சையதுபாதோதீன், பாட்சா, முருகேசன், நடேசசுப்ரமணியன், ராஜ்குமார், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.