பெரம்பலூர்: பெரம்பலூர் பார் அசோசியசனை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் தேவராஜன் மீது நிலப்பிரச்சினை தொடர்பாகவும்,
இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பெண் காவலரிடம் தகராறு செய்ததாகவும், பொய் வழக்கு போட்டுள்ள பெரம்பலூர் காவல் நிலைய போலீசாரை கண்டித்தும்,
வழக்கறிஞர்களை காவல் நிலையத்தில் வைத்து தரக்குறைவாக தகாத வார்த்தையில் பேசி, அவர்களை
தாக்கி கொடுமைபடுத்திய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 17ந்தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீதிமன்றம் தொடர்பான பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.